ADDED : மே 30, 2025 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: பரவை சத்தியமூர்த்தி நகரில் இந்திய கம்யூ., கட்சி மேற்கு ஒன்றியம் சார்பில் 25வது மாநாடு நடந்தது.
கட்சிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் காளிதாஸ் மாநாட்டை துவக்கிவைத்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் அறிக்கை வாசித்தார்.
சத்தியமூர்த்தி நகரில் புதிய மேம்பாலம் கட்டுதல், தெருநாய்களை கட்டுப்படுத்துதல்,அரசு புறம்போக்கு இடத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு பட்டா வழங்குதல்உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளர் முத்துவேல், நிர்வாகிகள் மூர்த்தி, சுதாகர், பெத்தனசாமி, மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.