/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆலைகளில் எரிக்கப்படும் தொழிற்சாலை கழிவுகள்
/
ஆலைகளில் எரிக்கப்படும் தொழிற்சாலை கழிவுகள்
ADDED : மே 18, 2025 03:01 AM

வாடிப்பட்டி:வாடிப்பட்டி, அலங்காநல்லுார் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலைகள் செயல்படுகின்றன.
தனிச்சியம், செம்புக்குடிபட்டி, கள்ளிவேலிபட்டி, மேலசின்னனம்பட்டி, கல்லணை, கோட்டைமேடு உள்ளிட்ட கிராம ஆலைகளில் தொழிற்சாலை கழிவுகளை எரிக்கின்றனர்.
தொழிற்சாலைகளில் வீணாகும் டயர், ரப்பர், ஆயில் சாக்கு, வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட கழிவுகளை விலைக்கு வாங்கி வந்து ரோட்டின் ஓரம் மற்றும் ஆலைக்குள் குவித்து வைக்கின்றனர்.
இவற்றை கரும்பு சக்கைகளுடன் கொட்டி எரிப்பதால் இப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காற்று மாசுபடுகிறது.
முதியோர், சிறு குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. நச்சு கழிவை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. குறைந்த விலைக்கு கிடைக்கும் கழிவுகளை ஆலைகளில் குவித்து வைப்பதால் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது.