ADDED : பிப் 24, 2024 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை செல்லம்பட்டியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக தெற்காறு துணை வடிநிலம் பகுதி விவசாயிகளுக்கு தொழில் முனைவோருக்கான வசதி பணிமனை கூட்டம் நடந்தது.
இணை இயக்குநர் சுப்புராஜ் தலைமை வகித்தார். வேளாண் வணிக துணை இயக்குநர் வளர்மதி முன்னிலை வகித்தார். தோட்டக்கலை, கால்நடை உதவி இயக்குநர்கள் பேபி, கவுதமன், முன்னோடி வங்கி மேலாளர் அனில், உசிலம்பட்டி உதவி செயற்பொறியாளர் சரவணபெருமாள், மண்டல வேளாண் வணிக நிபுணர் சுந்தரவதனம், மேற்பார்வையாளர் சுந்தரி, பல்வேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். வேளாண் அலுவலர் மீனா நன்றி கூறினார்.
உதவி வேளாண் அலுவலர்கள் ஷர்மிளா, ஆதி நாராயணன், சங்கர் கணேஷ், சண்முக சுந்தரபாண்டி, ராஜ்குமார், ஆனந்தமுருகன் ஏற்பாடுகளை செய்தனர்.