/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புராணம் சொன்ன தோற்பாவை கூத்து சமூகநீதி குறித்து சொல்லப்போகிறது பயிலரங்கில் தகவல்
/
புராணம் சொன்ன தோற்பாவை கூத்து சமூகநீதி குறித்து சொல்லப்போகிறது பயிலரங்கில் தகவல்
புராணம் சொன்ன தோற்பாவை கூத்து சமூகநீதி குறித்து சொல்லப்போகிறது பயிலரங்கில் தகவல்
புராணம் சொன்ன தோற்பாவை கூத்து சமூகநீதி குறித்து சொல்லப்போகிறது பயிலரங்கில் தகவல்
ADDED : ஜூன் 18, 2025 04:25 AM
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் அரசு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை சமூக நீதி சமத்துவ மையம் சார்பில் சென்னை சமூகப்பணிக் கல்லுாரி, போலீசின் சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு, அரசு மியூசியம், நாட்டுப்புறவியல் பண்பாட்டு ஆய்வுகள் துறை சார்பில் சமூக நீதிக் கதையாடல்களுக்கு தோற்பாவை கூத்துக் கலைஞர்களை தயார்படுத்தும் பயிலரங்கம் ஜூலை 1 வரை நடத்துகிறது. மாவட்ட துணை கலெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியர் கோபிநாத் வரவேற்றார்.
மியூசிய காப்பாட்சியர் மருது பாண்டியன், எஸ்.ஐ., கிருஷ்ணபாண்டி முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., சரவண ரவி பேசினார்.
பல்கலை ஆட்சிக்குழு உறுப்பினர் தருமராஜ் பேசியதாவது: தோற்பாவை கூத்து 400-500 ஆண்டுகள் பழமையானது. அரசர்கள் காலத்தில் சமயங்களை பரப்ப ஊர், ஊராக இக்கலைஞர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இரவு நிகழ்ச்சி தொடங்கினால் அதிகாலை வரை நடக்கும். இங்கே 2 பேர் நிகழ்த்தும் கலையாக இருக்கும். சீனாவில் 30 பேர் வரை நிகழ்த்தும் வகையில் இருக்கும். நல்லதங்காள், ராமாயணக்கூத்து கதைகள் தாண்டி இக்காலகட்டத்தில், சமூக நீதி கதைகள் வர வேண்டியது அவசியம். சமூக நீதி கூத்திற்கான பாவைகளை படைத்து அதற்கான வசனங்களை கலந்தாலோசித்து தீர்மானிக்க உள்ளோம். ஜூலை 7ல் ஒரு மணி நேரம் பொதுமக்களுக்கு சமூக நீதி கூத்து நிகழ்த்தப்படும் என்றார்.
பேராசிரியர் சுசீந்திரா 'சமத்துவம் காண்போம்' தலைப்பில் அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து பேசினார்.
பேராசிரியர் பிரியசித்ரா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் நன்றி கூறினார்.