/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திறன்களை வளர்த்துக் கொள்வதுடன் விரும்பிப் படித்தால் வேலை நிச்சயம் கருத்தரங்கில் தகவல்

ADDED : நவ 20, 2025 05:21 AM
மதுரை: மாணவர்கள் திறன்களை வளர்த்துக் கொள்வதுடன் பாடங்களை விரும்பிப் படித்தால் நிச்சயம் வேலை பெறலாம் என மதுரை கே.எல்.என்., பொறியியல் கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில் அமெரிக்கன் கல்லுாரி பொருளாதார துறை முன்னாள் தலைவர் முத்துராஜா பேசினார்.
அவர் பேசியதாவது: வகுப்பறை பாடம் மட்டுமின்றி தொழில்நுட்ப, வேலைவாய்ப்புத் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்பம், கேள்வி கேட்பது, பேச்சு, குழுவாக இணைந்து செயல்படுவது, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது, மொழி உள்ளிட்டத் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்புத் திறன்களை மேம்படுத்த, கல்லுாரிகளில் பயிற்சி நடத்துவதுடன், அதற்குரிய நுால்கள் அடங்கிய நுாலகம் அவசியம்.
பொறியியல் மாணவர்கள் தனியார் துறையை மட்டும் நம்பி இருக்காமல் அரசு சார்ந்த துறைகள், உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுயதொழில் போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். போட்டித் தேர்வு வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பாடங்களுடன் தொடர்புடைய வேலைத்திறன் பயிற்சிகளையும் முழுமனதோடு படித்தால் வேலை நிச்சயம் என்றார்.