ADDED : நவ 20, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சிம்மக்கல் மாவட்ட மைய நுாலகத்தில் 58 வது தேசிய நுாலக வார விழா நடந்தது. நுாலகர் நித்தியானந்தம் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., கருணாகரன் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். வெற்றி பெற பெரிதும் தேவை நுால்களா, வலைதளங்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.
மாநில நல்லாசிரியர் விருதுபெற்ற சண்முக திருக்குமரன், எழுத்தாளர் அ.ஈஸ்வரன், சிவகங்கை மாவட்ட மைய நுாலகர் வெங்கடவேல் பாண்டி பங்கேற்றனர்.

