/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தற்காலிக தொழிலாளர்களுக்கும் பணிக்கொடை தொழிலாளர் நலத்துறை மதுரை மண்டல கமிஷனர் தகவல்
/
தற்காலிக தொழிலாளர்களுக்கும் பணிக்கொடை தொழிலாளர் நலத்துறை மதுரை மண்டல கமிஷனர் தகவல்
தற்காலிக தொழிலாளர்களுக்கும் பணிக்கொடை தொழிலாளர் நலத்துறை மதுரை மண்டல கமிஷனர் தகவல்
தற்காலிக தொழிலாளர்களுக்கும் பணிக்கொடை தொழிலாளர் நலத்துறை மதுரை மண்டல கமிஷனர் தகவல்
ADDED : மார் 07, 2026 05:53 AM

மதுரை: ''ஓராண்டு பணிபுரிந்தால் தற்காலிக தொழிலாளர்களுக்கும் பணிக்கொடை கட்டாயம் வழங்க வேண்டும்,'' என மதுரையில் பத்திரிக்கை தகவல் அலுவலகம் (பி.ஐ.பி.,) சார்பில் நடந்த ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் தொழிலாளர் நலத்துறை மதுரை மண்டல கமிஷனர் பிரவீன் பாண்டி மோகன்தாஸ் பேசினார்.
அவர் பேசியதாவது:
நாடு முழுதும் தொழிலாளர் நலச்சட்டம் ஒன்று தான். மாநிலத்துக்கு மாநிலம் விதிமுறைகள் மட்டும் வேறுபடும். காலத்திற்கு ஏற்ப அச்சட்டம் சீரமைக்கப்படுகிறது. அவ்வகையில், இதற்கு முன் 14 வகை தொழிலாளர் சட்ட தொகுப்பு இருந்த நிலையில், தற்போது 4 வகை தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அனைத்து அம்சங்களும் அதில் அடங்கிவிடும்.
தொழில், அதனை வழங்குபவர், தொழிலாளி ஆகி ய மூன்றும் சார்ந்ததே தொழிலாளர் நலச்சட்டம். ஒருவர் குறைந்தது 5 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால் அவருக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். 4 ஆண்டுகள் 240 நாட்கள் பணிபுரிந்தாலே பணிக்கொடை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நியமிக்கப்படும் தற்காலிக தொழிலாளர்கள் ஓராண்டு பணி புரிந்தாலே அவர்களுக்கு பணிக்கொடை கட்டாயம் வழங்க வேண்டும். ஒப்பந்ததாரர் மூலம் நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு மாதம் 7ம் தேதிக்குள் ஒப்பந்ததாரர் தான் சம்பளம் வழங்க வேண்டும். வழங்காத போது நிறுவனத்திடம் தொழிலாளர்கள் முறையிடலாம். தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொழிலாளர் நலத் துறையை அணுகலாம்.
ஒரு நிறுவனத்தில் 10 பேர் பணிபுரிந்தாலே தொழிலாளர்களுக்கான காப்பீட்டு தொகை (இ.எஸ்.ஐ.,) பிடித்தம் செய்ய வேண்டும். பட்டாசு போன்ற ஆபத்தான தொழில் செய்யும் இடங்களில் ஒரேயொரு தொழிலாளி இருப்பினும் இ.எஸ்.ஐ., பிடித்தம் செய்ய வேண்டும்.
பாலின பாகுபாடின்றி தகுதிக்கேற்ப அனைவருக்கும் சமமான சம்பளம் வழங்க வேண்டும். முன்பு அபராத தொகையை நீதிமன்றம் வாயிலாக நிறுவனங்கள் செலுத்திய நிலையில், தொழிலாளர் நலத்துறையிலேயே அபராதம் செலுத்தும் வகையில் சட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பேசினார்.

