ADDED : நவ 15, 2024 05:53 AM
மதுரை: டில்லி தேசிய தேனீ வாரியம், மதுரை வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறை சார்பில் மாநில அளவிலான ஒருவார கால தேனீ வளர்ப்பு பயிற்சி நேற்று துவங்கியது.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், திருச்சி விவசாயிகள் பங்கேற்றனர். டீன் மகேந்திரன் பேசுகையில், பயிற்சிக்கு பின் ஒவ்வொருவரும் தொழில்நுட்பத்தை தெளிவாக தெரிந்து தொழில்முனைவோராக வேண்டும்'' என்றார். பூச்சியியல் துறைத்தலைவர் சந்திரமணி, தேனீக்கள் வகைகள், அவற்றின் சமுதாய வாழ்க்கை குறித்து விளக்கினார். உழவுத்தொழிலுக்கு தேனீக்களால் ஏற்படும் நன்மை குறித்து பயிர் நோயியல் துறைத்தலைவர் யேசுராஜா பேசினார்.
பயிற்சியாளர்கள் கண்டுணர் சுற்றுலாக ராஜபாளையத்தில் உள்ள ஷமீம் தேனீ வளர்ப்பு பண்ணை, மார்த்தாண்டத்தில் உள்ள கூட்டுறவு தேனீ வளர்ப்பு சங்கத்திற்கு சென்றனர். ஏற்பாடுகளை இணை பேராசிரியர்கள் சுரேஷ் செய்தனர்.