ADDED : மார் 04, 2024 05:38 AM

திருநகர்: தினமலர் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் தேவிநகர் - திருநகர் 8வது பஸ் நிறுத்தம் இடையே நிலையூர் கால்வாயில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி, தேவி நகர், பாலாஜி நகர் பகுதியில் இருந்து திருநகருக்கு செல்பவர்களுக்காக தேவி நகர் சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் நிலையூர் கால்வாயின்மேல் தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அந்தப்பாலம் 2020ல் இடிந்து விழுந்தது. மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையிலும் புதிய பாலம் அமைக்கப்படவில்லை.
நடந்து செல்பவர்களும், டூவீலர்களில் செல்வோரும் திருநகர் முதல் பஸ் ஸ்டாப் வழியாக சுற்றிச் சென்று வருகின்றனர். இதனால் திருநகர் - தேவி நகர் பகுதி துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தினமலர் செய்தி வெளியிட்டது.
செய்தியின் எதிரொலியாக அப்பகுதியில் புதிய தரைப்பாலம் கட்ட மாநகராட்சியில் இருந்து ஆறுமாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. சில மாதங்களாக கால்வாயில் திறக்கப்பட்ட மழைநீர், நிறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

