ADDED : நவ 08, 2024 07:28 AM
மதுரை: விதை, உரம், இடுபொருள் பட்டய படிப்புக்கான துவக்கவிழா மதுரை வாப்ஸ் தொண்டு நிறுவனத்தில் நேற்று துவங்கியது.
தொண்டு நிறுவன செயலாளர் அருள் வரவேற்றார். புதுக்கோட்டை சமிதி நிறுவன இயக்குநர் சங்கரலிங்கம் பேசியதாவது: விவசாயிகள் பயிரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் உரம், விதை, பூச்சிக்கொல்லி விற்பனையாளர்களைத்தான் முதலில் அணுகுகின்றனர். எனவே விற்பனையாளர்களுக்கு ஓராண்டு பயிற்சி அவசியம் என்பதால் மத்திய அரசின் விவசாயத்துறை, ஹைதராபாத் மேனேஜ் நிறுவனம், சமிதி மூலம் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 95ஆயிரம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர். ஓராண்டு பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு உரம், விதை, பூச்சிக்கொல்லி மருந்து கடை வைப்பதற்கு வேளாண் துறை மூலம் உரிமம் வழங்கப்படுகிறது என்றார். துணை இயக்குநர் அமுதன், விற்பனையாளர்கள் சங்க செயலாளர் ரவீந்திரன் பங்கேற்றனர். வாப்ஸ் ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

