நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி இளங்கோ மாநகராட்சி பள்ளியில் நடந்தது.
ஆரோக்கியமான உணவுகளை சமைப்பது குறித்து மாநகராட்சி கல்வி அலுவலர் ஜெய்சங்கர், தொற்று நோய்களை தடுப்பது குறித்து மாவட்ட திட்டமேலாளர் ஜெயபாண்டி, ஊட்டச்சத்து உணவும் ஆரோக்கியமும் குறித்து ஊட்டச்சத்து ஆலோசகர் கணேசன், உடல், மன ஆரோக்கியத்திற்கான யோகா குறித்து காந்தி மியூசிய யோகா ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் பேசினர். மதுரை இலக்கிய மன்ற நிறுவனர் அவனி மாடசாமி சமையல் கலையின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.

