ADDED : ஜூலை 13, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தியாகராஜர் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் 'இன்பத்தமிழ்' எனும் தலைப்பில் தீந்தமிழ் இலக்கிய மன்ற நிகழ்வு நடந்தது. முதல்வர் பாண்டியராஜா தலைமை வகித்தார். துறை தலைவர் காந்திதுரை முன்னிலை வகித்தார்.
மதுரைக் கல்லுாரி தமிழ்ப் பேராசிரியர் கண்ணன், நடைமுறை வாழ்வில் இயல்பாக இடம்பெற்றுள்ள இலக்கணத் தன்மையை சிலேடை அணி முலம் விளக்கினார். தமிழ் கற்றல் மூலம் தனிமனித வாழ்வில் ஒழுக்கங்களும், சமூக வாழ்வின் மேம்பாட்டையும் கம்பராமாயணத்தை மேற்கோள்காட்டி எடுத்துரைத்தார். சுயநிதிப் பிரிவு இயக்குனர் சுகுமார், துறை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், பேராசிரியர் சத்யா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.