ADDED : நவ 22, 2025 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: செல்லம்பட்டி ஒன்றியத்தில் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறும் குப்பணம்பட்டி, கட்டக்கருப்பன்பட்டி, நாட்டாபட்டி, சடச்சிபட்டியில் பயிரிட்டுள்ள நெற்பயரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் நெல்தழைகள் பச்சையத்தை இழந்து பட்டுப்போகின்றன.
அடுத்தடுத்த செடிகளுக்கும் இந்தத் தாக்குதல் பரவுவதால் பாதிப்பு அதிகரித்து மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

