/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்
/
குன்றத்தில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 20, 2025 05:29 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே இருந்த மெயின் ரோட்டை வாகனங்களும், மக்களும் பயன்படுத்தி வந்தனர். அங்கு மேம்பாலம் கட்டப்பட்டபின்பு, இரண்டாவது அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு அதிக ரயில்கள் செல்கின்றன. இதனால் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக ரயில்வே துறை சார்பில் அப்பகுதி முழுவதும் இரும்பு தடுப்புகள் அமைத்தனர்.
இதனால் பாலாஜி நகர், பாலசுப்பிரமணிய நகர், ஹார்விபட்டி, சந்திராபாளையம் பகுதி மக்கள் திருப்பரங்குன்றம் செல்வதற்கு மேம்பாலத்தின் வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பள்ளி குழந்தைகளும் சிரமம் அடைகின்றனர். மேம்பாலத்தின் ஆரம்ப பகுதியும், முடிவு பகுதியும் வெகு துாரத்தில் உள்ளது. எனவே அங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என சர்வ கட்சியினர், வணிகர்கள் கடந்தாண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பது குறித்து திருமங்கலம் ஆர்.டி.ஓ., திருப்பரங்குன்றம் தாசில்தார் ஆகியோர் ரயில்வே ஸ்டேஷன் அருகே ஆய்வு மேற்கொண்டனர். இதுவரை சுரங்கப்பாதை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மாணவர்கள் வயதானவர்கள் சிரமம் அடைகின்றனர். திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷன் அருகே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் மீண்டும் வலியறுத்தி வருகின்றனர்.