/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேல்நிலை தொட்டியை பராமரிக்க வலியுறுத்தல்
/
மேல்நிலை தொட்டியை பராமரிக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 21, 2025 06:21 AM
பேரையூர்: 'குடிநீர் தொட்டிகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்'' என பேரையூர் தாலுகா பொதுமக்கள் எதிர்பார்க்கி்னறனர்.
பேரையூர் தாலுகா சேடப்பட்டி, டி.கல்லுப்பட்டி ஒன்றியங்களில் 72 ஊராட்சிகள் பேரையூர், டி. கல்லுப்பட்டி, ஏழுமலை ஆகிய 3 பேரூராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. 50 ஆயிரம் முதல் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள் மூலம் பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வைகை மற்றும் உள்ளூர் கிணறுகளில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவற்றில் பல மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் முறையான பராமரிப்பு இன்றி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கிராமத்தினர் கூறியதாவது: பெரும்பாலான தொட்டிகளை முறையாக சுத்தம் செய்யாததால் அவற்றில் பாசி படர்ந்து உள்ளது. தெரு குழாய்கள், வீட்டு இணைப்புகளில் குடிநீர் விநியோகம் செய்யும்போது பாசியுடன் தண்ணீர் வருகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பிளீச்சிங் பவுடரால் சுத்தம் செய்ய வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொது மக்களுக்கு விநியோகம் செய்வதன்மூலம் தொற்று நோய் பரவுவதை தடுக்கலாம் என்றனர்.

