/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போடி - ராமேஸ்வரம் இடையே ரயில்களை இயக்க வலியுறுத்தல்
/
போடி - ராமேஸ்வரம் இடையே ரயில்களை இயக்க வலியுறுத்தல்
போடி - ராமேஸ்வரம் இடையே ரயில்களை இயக்க வலியுறுத்தல்
போடி - ராமேஸ்வரம் இடையே ரயில்களை இயக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 28, 2025 05:15 AM
மதுரை: தேனி மாவட்டம் போடி - ராமேஸ்வரம் இடையே பகல் நேர ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
புதிய பாம்பன் துாக்குப்பாலம் திறக்கப்பட்ட பின் ராமேஸ்வரம் செல்லும் ரயில்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது. மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினமும் காலை 6:50, மதியம் 1:50, மாலை 6:15 மணிக்கு முன்பதிவில்லா பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மறுமார்க்கத்தில் அதிகாலை 5:45, காலை 11:40, மாலை 6:15 மணிக்கு பயணிகள் ரயில் மதுரைக்கு இயக்கப்படுகின்றன.
காலை 6:50 முதல் மதியம் 1:50 மணி வரை மதுரை - ராமேஸ்வரம், காலை 11:40 முதல் மாலை 6:15 மணி வரை ராமேஸ்வரம் - மதுரை இடையே ரயில்கள் இல்லை. கோடை விடுமுறையில் வாரம் 4 நாட்கள் விழுப்புரம் - ராமேஸ்வரம் இடையே மதுரை வழியாக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. அதிகாலை 4:15 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு காலை 9:00 மணிக்கு மதுரை வந்து, 11:40 மணிக்கு ராமேஸ்வரம் சென்றது. மறுமார்க்கத்தில் மதியம் 2:35 மணிக்கு புறப்பட்டு மாலை 5:20 மணிக்கு மதுரை வந்து, இரவு 10:35 மணிக்கு விழுப்புரம் சென்றது.
ஒரு ஏசி சேர்கார் பெட்டி, 11 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் என 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட இவ்விரு ரயில்கள், பள்ளிகள் திறக்கப்பட்டபின் சனி, ஞாயிறுகளில் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. நேற்றுடன் இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. காலையில் போடியில் இருந்து மதுரைக்கும், மாலை மதுரையில் இருந்து போடிக்கும் ரயில்கள் இல்லை. எனவே போடி - ராமேஸ்வரம் இடையே ரயில்களை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில்,'போடியில் இருந்து தினமும் காலை 7:00 மணிக்கு புறப்பட்டு 9:00 மணிக்கு மதுரை வந்து, மதியம் 12:15 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும் வகையிலும், அங்கிருந்து மதியம் 2:40 மணிக்கு புறப்பட்டு மாலை 5:50 மணிக்கு மதுரை வந்து, இரவு 8:00 மணிக்கு போடி செல்லும் வகையிலும் முன்பதிவில்லா பயணிகள் ரயில்களை இயக்கலாம்,' என்றனர்.