/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தல்
/
அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தல்
ADDED : ஜூலை 03, 2025 03:31 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநாடு தலைவர் மணி தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். இணைச்செயலாளர் பானு துவக்க உரையாற்றினார். செயலாளர் வேல்மயில் மாநாட்டு அறிக்கை, பொருளாளர் பாண்டியம்மாள் வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்தனர். முன்னாள் மாநில பொதுச் செயலாளர் செல்வம், பொருளாளர் ஜெயராமன், அரசு ஊழியர் சங்க கிளைத் தலைவர் சூசைநாதன், மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் பேசினர்.
துணைத் தலைவர் காமாட்சி தீர்மான அறிக்கை வாசித்தார். அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும், வாடிப்பட்டி வட்டாரத்தில் அரசு கலைக் கல்லுாரி அமைக்க வேண்டும். அலங்காநல்லுார் பகுதியில் மா, கொய்யா பழங்களுக்கு குளிர் பதனக் கிடங்கு, வாடிப்பட்டி அரசு மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். முதியோருக்கு ரயில் கட்டணம் சலுகை, ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர் வனத்துறை காவலர், ஊராட்சி செயலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது பூர்த்தியானவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர் நன்றி கூறினார்.