/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரயில்வே ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் மருத்துவமனைகளில் சுகாதாரக்கேடு

ADDED : பிப் 07, 2024 07:10 AM
மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷன் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக்கவேண்டும் என தட்சண் ரயில்வே எம்பளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யூ.,) கோட்ட இணைச்செயலாளர் சங்கரநாராயணன் வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது: 2019 ல் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் ரயில்வே மருத்துவமனைகளுக்கு துப்புரவு தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்தனர். கொரோனா பரவலால் 2023 நவ., வரை பணியாற்றினர். இவர்களை நிரந்தர தொழிலாளர்களாக்கநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இறுதி முடிவு வரும் வரை வேறு யாரையும் நியமனம் செய்யக்கூடாது என்ற உத்தரவை பெற்றோம்.
ஆனால் ரயில்வே நிர்வாகம் வேறு ஒப்பந்தக்காரருக்கு துப்புரவு பணியை வழங்கியது. அதை நீதிமன்றம் ரத்து செய்தது.வழக்கு தொடுத்த தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்த தெற்கு ரயில்வே தலைமை தொழிலாளர் நல அதிகாரி கால தாமதம் செய்கிறார்.
இதனால் பெரம்பூர், மதுரை ரயில்வே மருத்துவமனைகளில் துப்புரவுப்பணிகளை செய்ய ஆள் இல்லாமல் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது என்றார்.