/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அகவிலைப்படி உயர்வு வழங்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்; எட்டு ஆண்டுகளாக எட்டாத பலன்

ADDED : மார் 16, 2024 07:28 AM
மதுரை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு 2015 முதல் இன்று வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.
இதனால் பலர் குறைவான ஓய்வூதியமே பெற்று வருகின்றனர்.
2015 முதல் அகவிலைப்படியை நிறுத்தியதை எதிர்த்து ஓய்வூதியர் நலச்சங்கங்கள் மூலம் உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டது.
இதில் அகவிலைப்படி உயர்வை வழங்கும்படி நீதிபதிகள் தீர்ப்பளித்த போதிலும், வழங்காத அரசு நிர்வாகம் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து வருகிறது.
இதையடுத்து அதிருப்தியடைந்துள்ள ஓய்வூதியர்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்த உள்ளனர். இதுகுறித்து அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்பு சங்கத்தின் சட்ட ஆலோசகர் ஜீவன்மூர்த்தி கூறுகையில், ''இப்பிரச்னையில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் 92 ஆயிரம் ஓய்வூதியர்கள் பயன்பெறுவர். இதனை வலியுறுத்தும் வகையில், தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் (மார்ச் 18) அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்க உள்ளோம்'' என்றார்.