/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேரிடர் மேலாண்மை பிரிவில் ஊழியர் குறைப்பு மீண்டும் வழங்க வருவாய் அலுவலர்கள் வலியுறுத்தல்

ADDED : அக் 21, 2024 05:12 AM
மதுரை: 'பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் ஒப்பளிப்பு செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் மாநில தலைவர் முருகையன், பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் கூறியிருப்பதாவது: தமிழக கலெக்டர் அலுவலகங்களில் செயல்படும் பேரிடம் மேலாண்மை பிரிவில் 39 முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள், அலுவலக உதவியாளர் பணியிடங்களை முன்னறிவிப்பு இன்றி 31.3.2023 முதல் நிரந்தரமாக கலைத்து உத்தரவிட்டனர். இதை ரத்து செய்து மீண்டும் ஒப்பளிப்பு செய்ய வலியுறுத்தி கடந்த ஜூன் முதல் முறையீடு அளித்தும் நிறைவேறவில்லை.
பேரிடர் காலங்களில் மக்கள் உயிர் காக்கும் பணிகளை 24 மணி நேரமும் இத்துறையினர் மேற்கொள்கின்றனர். பருவமழையால் ஏற்படும் உயிர், உடைமை, கால்நடை இழப்புகளை கணக்கெடுப்பது, நிவாரணம் வழங்க பரிந்துரைப்பது, உரிய நிவாரணம் வழங்குவது என செயல்படுகின்றனர்.
இப்பிரிவில் ஒரு தாசில்தார், முதுநிலை வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர் ஆகிய 3 பணியிடங்கள் மட்டுமே ஒப்பளிப்பு செய்து பணிநடந்தது. முன்னறிவிப்பு இன்றி இப்பணியிடங்கள் கலைக்கப்பட்டதால், ஒரு தாசில்தாரே அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறார். இதனால் அரசுக்கு அறிக்கை அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இப்பிரிவில் ரத்து செய்த பணியிடங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.