/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோரிப்பாளையம் மேம்பாலத்தில் 60 டன் பீம்கள் பொருத்தும் பணி
/
கோரிப்பாளையம் மேம்பாலத்தில் 60 டன் பீம்கள் பொருத்தும் பணி
கோரிப்பாளையம் மேம்பாலத்தில் 60 டன் பீம்கள் பொருத்தும் பணி
கோரிப்பாளையம் மேம்பாலத்தில் 60 டன் பீம்கள் பொருத்தும் பணி
ADDED : நவ 15, 2025 04:45 AM

மதுரை: மதுரை கோரிப்பாளையம், மேலமடை சந்திப்பு பகுதிகளில் முறையே ரூ.190 கோடி, ரூ.150 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலமடை சந்திப்பில் பணிமுடியும் நிலையில் உள்ளது. இப்பாலத்தை டிச.7 ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கோரிப்பாளையம் சந்திப்பில் தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணாத்துரை சிலை வரையான பகுதியை ஜனவரிக்குள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்கன் கல்லுாரி முதல் தேவர் சிலை வரையான பகுதியில் உள்ள 10 பில்லர்களுக்கும் இடையே பெரிய பீம்களை பொருத்தும் பணி நடக்கிறது.
மொத்தம் 41 பீம்கள் பொருத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பீம் எடை 60 டன். இவற்றை துாக்கி பொருத்த 3 கிரேன்கள் செயல்படுகின்றன. நேற்று முன்தினம் இருபில்லர்கள் இடையே 8 பீம்களை பொருத்தியுள்ளனர். இப்பணி முடிவடைந்தபின், பீம்களின் மேல்தளத்தில் கான்கிரீட் கொண்டு நிரப்பி ரோடு அமைக்கப்படும். இப்பணிகளை கண்காணிப்பு பொறியாளர் செல்வநம்பி, கோட்ட பொறியாளர்கள் மோகனகாந்தி, உதவி கோட்டப் பொறியாளர் சுகுமார், உதவிப்பொறியாளர் வெங்கடேஷ்பாபு ஆய்வு செய்தனர்.

