/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருமங்கலம் மேம்பால பணிகளில் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி
/
திருமங்கலம் மேம்பால பணிகளில் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி
திருமங்கலம் மேம்பால பணிகளில் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி
திருமங்கலம் மேம்பால பணிகளில் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி
ADDED : ஏப் 24, 2025 05:49 AM

திருமங்கலம்: திருமங்கலம் விமான நிலைய ரோடு ரயில்வே கிராசிங்கில் தினமும் 60 முறைக்கு மேல் ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இதுகுறித்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பாலம் அமைக்க கோரிய நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
ரூ. 33 கோடி செலவில் பாலம் அமைகிறது. ஐம்பது சதவீத பணிகள் முடிந்துள்ளது. ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள இடங்களில் இரும்பு கர்டர்களைக் கொண்டு பாலம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த இரும்பு கர்டர்களை பொருத்த 150 டன் எடை துாக்கும் அளவுள்ள 2 ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டிருந்தன.
நேற்று காலை முதல் மாலை வரை நடந்த பணியில் மூன்று இணைப்புகளாக இணைக்கப்பட்ட 100அடி நீளமுள்ள மூன்று கர்டர்கள் பாலத்தின் மேல் பகுதியில் துாக்கி வைக்கப்பட்டன. பால வேலைகள் வேகமாக நடந்து வரும் நிலையில் மேலும் சில இடங்களில் பாலம் அமைப்பதற்கான, இடத்தை கையகப்படுத்தி தராமல் மாவட்ட நிர்வாகம் தாமதப்படுத்தி வருகிறது. இதனால் இந்தாண்டு இறுதிக்குள் பாலம் வேலைகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு இடங்களை கையகப்படுத்தி தரவேண்டும்