ADDED : நவ 26, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சம்பா நெல்லுக்கு நவ. 15 க்குள் காப்பீடு செய்ய கெடு விதிக்கப்பட்டிருந்தது. தொடர் விடுமுறை, மழையால் பல விவசாயிகள் காப்பீடு செய்யவில்லை.
இதையடுத்து நவ. 30 வரை காப்பீடு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 568 ஏக்கர் பரப்பளவுக்கே பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளம், புயல், வறட்சியின் போது இழப்பீடு பெற விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது அவசியம். ஏக்கர் நெல்லுக்கு ரூ.534க்கான பிரீமியத் தொகையை நவ. 30க்குள் பொதுசேவை மையங்கள், வங்கிகளில் செலுத்தலாம்.

