நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் அருள்மணி கூறியிருப்பதாவது:
பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் ராபி பருவத்தில் வாழைக்கு ஏக்கருக்கு ரூ. 1792 செலுத்தி காப்பீடு செய்ய வேண்டும். இயற்கை இடர்பாட்டால் பாதிப்பு ஏற்பட்டால் ஏக்கருக்கு ரூ. 89 ஆயிரத்து 600 இழப்பீடு கிடைக்கும். 2026 பிப். 28 கடைசி தேதி. விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு, தேசிய வங்கி மற்றும் இ சேவை மையங்களில் விண்ணப்பம், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை ஆவணங்களுடன் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

