/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையம் ரூ.36 கோடியில் அமைகிறது
/
மதுரையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையம் ரூ.36 கோடியில் அமைகிறது
மதுரையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையம் ரூ.36 கோடியில் அமைகிறது
மதுரையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையம் ரூ.36 கோடியில் அமைகிறது
ADDED : நவ 11, 2025 03:51 AM
மதுரை, நவ. 11 - மதுரையில் ரூ.36 கோடியில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவப் பிரிவும், அறுவை சிகிச்சை பிரிவும் செயல்படுகிறது. குழந்தைகளுக்கான புற்றுநோய் மையம், புற்றுநோய் செல்களை கண்டறியும் பெட் ஸ்கேன், ரேடியோலஜி, திசு பரிசோதனை மையம் (பேதாலஜி) அனைத்துமே இங்குள்ளது.
மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பின் புற்றுநோயாளி களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்க வேண்டும் எனில் அதற்கான வசதி இங்கில்லை.
பாலரெங்காபுரத்தில் உள்ள புற்றுநோய் மண்டல மையத்தில் மட்டும் கதிர்வீச்சு சிகிச்சை வசதி உள்ளதால் அரசு மருத்துவமனைக்கும் பாலரெங்காபுரத்திற்கும் நோயாளிகள் அலைகின்றனர். தற்போது வரை இந்நிலையே தொடர்கிறது.
இடமாற்றம் தேவை அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைத்து செய்வதற்கு அரசு மருத்துவமனையில் இடவசதியில்லை.
புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்ட பின் பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஒன்றிரண்டு துறைகள் பெயருக்கு செயல்படுகின்றன. ஒன்றே முக்கால் ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் துவங்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இந்த இடத்தில் ரூ.36 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையம் துவங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டுமானம் முடிந்தபின் இதற்கான கட்டுமானம் துவங்க உள்ளது.

