ADDED : நவ 11, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழகத்தில் கற்றல் கற்பித்தல், அடிப்படை வசதிகள், ஆசிரியர்களின் பணிகள் என்ற அடிப்படையில் 3 ஆண்டுகளாக தொடக்கக் கல்வியில் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்படுகின்றன.
இதன்படி 2024 -2025 ஆண்டுக்கான சிறந்த பள்ளிகளாக 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் மதுரையில், மாநகராட்சி கைலாசபுரம் தொடக்க, குராயூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை, மதுரை கிழக்கு ஒன்றியத்தில் உள்ள மாயாண்டிபட்டி தொடக்க பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இப்பள்ளிகளுக்கு கேடயம் வழங்கும் விழா கல்வி அமைச்சர் தலைமையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல் நிலைப் பள்ளியில் நவ.14ல் நடக்கிறது. இதில் பங்கேற்க அப்பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

