ADDED : நவ 11, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழியக்கம் 8 ம் ஆண்டு துவக்க விழா எழுச்சி விழாவாக நாளை (நவ.12) காலை 10:00 மணிக்கு தெப்பக்குளம் தியாகராஜர் கல்லுாரியில் நடக்கிறது.
மாணவர்களிடையே தமிழ், தமிழர் நலன் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தமிழியக்க தலைவரும், வி.ஐ.டி., பல்கலை வேந்தருமான கோ.விஸ்வநாதன் தலைமை வகிக்கிறார். அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், கல்லுாரி செயலாளர் ஹரிதியாகராஜன், பேராசிரியர் ஞானசம்பந்தன், தமிழியக்க மாநில செயலாளர் சுகுமார், பொதுச் செயலாளர் அப்துல்காதர் உட்பட பலர் பேச உள்ளனர்.

