தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/அறிவுசார் சொத்துரிமை கண்காட்சி

அறிவுசார் சொத்துரிமை கண்காட்சி

அறிவுசார் சொத்துரிமை கண்காட்சி


UPDATED : அக் 12, 2026 07:54 PM

ADDED : அக் 12, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 07:54 PM ADDED : அக் 12, 2026 07:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழில் வசதியாக்கல் அமைப்பு (பேம் டி.என்.,) சார்பில் அறிவுசார் சொத்துரிமை, புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகளின் சிறப்பு கண்காட்சி நாளை (அக். 14) காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது.

‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் கீழ் உள்ள தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அறிவுசார் சொத்துரிமை, காப்புரிமை, வர்த்தக முத்திரை, புவிசார் குறியீடு, வடிவமைப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு அமர்வுகள் நடத்தப்படுகின்றன. அறிவுசார் சொத்துரிமை பதிவு பெற்ற எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், புவிசார் குறியீடு தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், பாரம்பரிய, புதுமை தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நடத்துவோர் பங்கேற்கலாம் என, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us