/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'நமோ செயலி'யை பிரபலப்படுத்த தீவிரம்
/
'நமோ செயலி'யை பிரபலப்படுத்த தீவிரம்
ADDED : பிப் 12, 2024 05:17 AM
மதுரை: தமிழகத்தில் 'நமோ செயலி' பிரபலப்படுத்த பா.ஜ.,தகவல் தொழில்நுட்ப பிரிவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் 'நமோ' செயலி செயல்படுத்தப்படுகிறது. பா.ஜ., அரசின் பத்தாண்டு திட்டங்கள், செயல்பாடுகள், பிரதமரின் திட்டங்களில் பயன்பெறும் வழிமுறைகள், பயன்பெற்றோர் விவரம் என எல்லாமே இதில் உள்ளன.
வரும் லோக்சபா தேர்தலையொட்டி தமிழகத்தில் இதனை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க மாநில துணைத்தலைவர் விஷ்ணுபிரசாத் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவு மக்களிடம் இது சென்று சேர்ந்துள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சராசரி முன்பைவிட அதிகமாக உள்ளது.
இதனை இளைஞர்கள் வசம் கொண்டு சேர்க்க சமூக ஊடக பிரிவின் மாநில தலைவர் பாலாஜி, பொறுப்பாளர் அர்ஜூனமூர்த்தி ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. தற்போது நமோ செயலியை பிரபலப்படுத்த ஆங்காங்கே ஸ்டால்கள் அமைப்பது, கல்லுாரிகளுக்கு வெளியே மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என செயல்படுகின்றனர்.
விஷ்ணுபிரசாத் கூறுகையில், ''நமோ செயலி தமிழ் உட்பட பல மொழிகளில் உள்ளது. மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை நிறைவாக பல்லடத்தில் நடக்கும் விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார். இதற்காக 'மீண்டும் மோடி, வேண்டும் மோடி' என்ற ேஹஷ்டேக்கை பிரபலப்படுத்த எண்ணியுள்ளோம் என்றார்.