/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிளஸ் 1ல் உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்களுக்கு ஆர்வம்; 'கசக்குது' கணிதம்
/
பிளஸ் 1ல் உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்களுக்கு ஆர்வம்; 'கசக்குது' கணிதம்
பிளஸ் 1ல் உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்களுக்கு ஆர்வம்; 'கசக்குது' கணிதம்
பிளஸ் 1ல் உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்களுக்கு ஆர்வம்; 'கசக்குது' கணிதம்
ADDED : மே 16, 2024 05:40 AM

மதுரை: மதுரையில் பிளஸ் 1ல் உயிரியில் - கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் - கணிதம், வணிகவியல் - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் போன்ற குரூப்களை தேர்வு செய்வதில் மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். பெரும்பாலும் கணிதம் இடம் பெற்ற குரூப்களை மாணவர்கள்தவிர்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாவட்டத்தில் 117 அரசு, 80க்கும் மேற்பட்ட உதவி பெறும், 200க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகளில் அறிவியல் மற்றும் கலைப் பிரிவுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் உயர்கல்விக்கு செல்லும் நுழைவு வாயிலாக பிளஸ் 1 உள்ளது. இங்கிருந்து தான் மாணவர்களின் கலை அல்லது அறிவியல் படிப்பு பயணம் துவங்கும்.
நன்றாக படிக்கும் திறன் கொண்ட மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படிப்பை மனதில் வைத்து அதற்கான குரூப்களை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் உயிரியில் - கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் - கணிதம் குரூப்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இதையடுத்து அரசு பள்ளிகளில் வணிகவியல்- கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்குரூப்களிலும் அதிகம் சேர்க்கையாகின்றன. பெரும்பாலான மெட்ரிக்பள்ளிகளில் கணிதம் இல்லாத உயிரியல் - கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவுகளில் மாணவர்கள் அதிகம் சேர்கையாகின்றனர். கணிதத்தில் 80க்கு கீழ் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கணிதம் உள்ள குரூப்களை பிளஸ் 1ல் தவிர்ப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
மருத்துவம், பொறியியல் கனவில் உள்ள மாணவர்கள் நீட், ஜே.இ.இ., எதிர்நோக்கி அதுதொடர்பான குரூப்களை தேர்வு செய்வதில் இந்தாண்டும் அதிக ஆர்வமாக உள்ளனர். கணிதத்தில் மதிப்பெண் குறைந்தவர்கள் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை அதிகம் தேர்வு செய்கின்றனர். இதுதவிர கலை பிரிவில் வணிகவியல் பிரிவில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் குரூப்பை அதிகம் விரும்புகின்றனர்.
பிளஸ் 1, பிளஸ் 2வில்கணிதத்தில் அதிக பாடங்கள் உள்ளன. மேலும் கிரியேட்டிவ் வினாக்கள் இடம் பெறும் என்ற அச்சத்தால் பத்தாம் வகுப்பில் 70 சதவீதத்திற்கு கீழ் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கணிதம் இல்லாத குரூப்களை தேர்வு செய்கின்றனர் என்றனர்.