/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'மக்களுடன் முதல்வர்' திட்ட மனுக்களுக்கு தீர்வு காண ஆர்வம் வருவாய்த்துறையின் வழக்கமான பணிகள் சுணக்கம்

ADDED : பிப் 16, 2024 05:33 AM
மதுரை: 'மக்களுடன் முதல்வர்' திட்ட மனுக்களை பரிசீலனை ஒருமாதத்தையும் தாண்டி நீடிப்பதால் வருவாய்த்துறையின் இதர பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது.
இத்திட்டத்தில் மதுரை மாவட்ட அளவில் பல ஆயிரம் மனுக்கள் குவிந்தன. உடனுக்குடன் தீர்வு காண அரசு உத்தரவிட்டிருந்ததால் வருவாய், நிலஅளவை, நெடுஞ்சாலை, பொதுப்பணி, மருத்துவம் என அனைத்து துறைகளும் சுறுசுறுப்பாக இயங்கின.
ஒவ்வொரு தாலுகாவிலும் 1000 முதல் 1300க்கும் மேற்பட்ட மனுக்கள் பிரித்து சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கி பதிலனுப்பும் படியும், அவற்றுக்கு ஒருமாதத்திற்குள் தீர்வு காணும்படியும் தெரிவித்தனர்.
தற்போது வருவாய், நிலஅளவை ஊழியர்கள் பலரும் இதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஒருமாதம் தாண்டியும் இப்பணி முடிவடையவில்லை. ஊழியர்கள் இப்பணியில் முழுமையாக இறங்கியதால் அவர்களின் வழக்கமான பணிகள் முடங்கியுள்ளன.
அலுவலர்கள் கூறுகையில், ''மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண உள்ளோம். இதில் மனு கொடுத்தோருக்கு விழா நடத்தி வழங்கிய பின் வழக்கமான பணிகள் துவங்கும்'' என்றனர்.