நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பகுதிகளில் இறவை பாசன கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துஉள்ளதால் விவசாயிகள் நெல் நடவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த மாதம் பெய்த மழையால் பாசனக் கிணறுகளில் நீர் சுரப்புஅதிகரித்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு விதைப்பு செய்த பசுந்தாள் உரச் செடிகள் தற்போது வளர்ந்துள்ளன.
வளர்ந்த செடிகளில் நீர் விட்டு மண்ணில் உரமாக்குவதற்கு தொழி அடிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். விவசாயிகள் நிலங்களில் நெல் விதைத்து நாற்றுகளாக வளர்த்து வைத்துள்ளனர். அந்நாற்றுகளை தற்போது பிடுங்கி நடவு செய்வதில் ஆர்வமாக உள்ளனர்.