ADDED : நவ 11, 2025 03:48 AM

சோழவந்தான்: நகரி கல்வி இன்டர்கான்டினென்டல் பள்ளி 9ம் வகுப்பு மாணவர் தருண், 'மாடல்யுனைடெட் நேஷன்ஸ்' சர்வதேச மாநாட்டில் ' ஸ்பெஷல் மென்ஷன்' விருது பெற்றுள்ளார்.
ம.பி.,மாநிலம் இந்துாரில் எம்.யூ-20 சர்வதேச மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட தருண், கென்யாவை பிரதிநிதித்துவப் படுத்தி 'எக்கனாமிக் அன்ட் சோசியல்' கவுன்சில் குழுவில் இவ்விருதை பெற்றுள்ளார். 'பிரிட்ஜிங் தி குளோபல் டிஜிட்டல் டிவைட் பார் சஸ்டைனபிள் டெவலப்மென்ட்' எனும் தலைப்பில் உலக அளவில் வளர்ந்த, வளரும் நாடுகளுக்கு இடையேயான டிஜிட்டல் இடைவெளியை குறைப்பது குறித்து இவருடைய கருத்து இருந்தது.
இது 21ம் நுாற்றாண்டின் முக்கிய உலக பிரச்னைகளில் ஒன்று.
உலகளாவிய கொள்கைகள், டிஜிட்டல் இன்க்ளூஷன் முயற்சிகள், சமமான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சர்வதேச ஒத்துழைப்பின் அவசியம் குறித்து தனது கருத்துகளை திறமையாக வெளிப்படுத்தியுள்ளார்.
கென்யாவின் டிஜிட்டல் கல்வி விரிவாக்கம், இணைய அணுகல், புதுமை வளர்ச்சி திட்டங்களை இவர் விளக்கிய விதம் குறிப்பிடத்தக்கது. தருணை, பள்ளித் தலைவர் செந்தில்குமார், முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

