/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சர்வதேச சுற்றுலா செல்லலாமா இன்று கண்காட்சி நிறைவு
/
சர்வதேச சுற்றுலா செல்லலாமா இன்று கண்காட்சி நிறைவு
ADDED : டிச 22, 2024 07:52 AM
மதுரை: மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்து வரும் உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலா கண்காட்சி இன்று(டிச.22) நிறைவுபெறுகிறது.
இந்தியா சர்வதேச டிராவல் கண்காட்சி நிறுவனம் சார்பில் நடக்கும் இக்கண்காட்சியில் தமிழ்நாடு, உ.பி., குஜராத், அந்தமான், மாநில சுற்றுலாத் துறைகள், ஸ்கூட் ஏர்லைன்ஸ், ஐரோப்பாவிற்கான ஸ்விட்ரஸ் விடுமுறைகள், யுடூ டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ், பூடான் ரென் டூர்ஸ், யாத்திரைடாட் காம், கிராண்ட் ராயல் டூர்ஸ், ஜம்ஜம் ஹாலிடேஸ் மில்லேனியம் டூர்ஸ், மேக் மை ஜர்னி, என அரசு மற்றும் தனியார் அமைப்பின்அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக அடுத்தாண்டு நடக்கவுள்ள கும்பமேளா குறித்த ஸ்டாலும் உள்ளது. இதுகுறித்து உ.பி. டூரிஸம் நிர்வாகி ஜம்பேல் கூறியதாவது: 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பமேளா நடக்கிறது. இந்த பேக்கேஜில்பிராயக்ராஜ், சாரநாத், அயோத்தி, லும்பினி, லக்னோ ஆகிய இடங்களை 15 நாட்களில் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்துள்ளோம். குஜராத் பட்டம் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய சுற்றுலாவிற்கு நிறைய சலுகைகள் இருக்கின்றன என்றார். கண்காட்சி ஏற்பாட்டை ஐ.ஐ.டி.இ., இயக்குனர் அனுராக் குப்தா செய்துள்ளார்.
கண்காட்சி இன்று காலை 11:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம். மேலும் விபரங்களுக்கு 98867 26567 ல் தொடர்பு கொள்ளலாம்.