UPDATED : அக் 11, 2026 04:38 PM
ADDED : அக் 11, 2026 04:36 PM
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி முதுகலை இயற்பியல் ஆராய்ச்சித் துறை சார்பில், நிலையான எரிசக்தி தொழில் நுட்பங்களில் வளர்ந்து வரும் போக்குகள், மேம்பட்ட பொருட்கள் முதல் அடுத்த தலைமுறை எரிசக்தி சாதனங்கள் வரை என்ற தலைப்பில் 5 நாட்கள் யிலரங்கம் நடந்தது.
சர்வதேச ஆசிரியர் திறன் மேம்பாடு குறித்து இணைய வழியில் நடந்த பயிலரங்கிற்கு கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். இயற்பியல் துறைத் தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் வரவேற்றார். சுயநிதிப்பிரிவு இயக்குனர் பிரபு துவக்கி வைத்துப் பேசினர்.
தென் கொரியா பேராசிரியர்கள் பாலமுருகன் ஜெயராமன், சக்திவேல் பெருமாள், மலேசியா பேராசிரியர் சின்னையா, கத்தார் பேராசிரியர் தீபலட்சுமி பொன்னம்மா உட்பட பலர் பேசினர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, நீர் மின்னாற்பகுப்பு, ஆற்றல் சேமிப்பு, நானோ தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொருள் ஆராய்ச்சி துறைகளில் நவீன முன்னேற்றம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பேராசிரியர் ஹேமலதா நன்றி கூறினார்.
