நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லுாரி இளங்கலை, முதுகலை பொருளாதாரத் துறை மாணவிகளுக்கான படிப்பிடை பயிற்சி அளிக்கப்பட்டது.
பொருளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பேராசிரியர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். காந்திய கல்வி எனும் தலைப்பில் கல்வி அலுவலர் நடராஜன், காந்திய பொருளாதாரம் தலைப்பில் ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், நலம் தரும் யோகா தலைப்பில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன யோகா ஆசிரியர் ரூபாவதி பேசினர். புத்தபிக்கு இஸ்தானிஜி தலைமையில் ஹிரோஷிமா தின சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பிக்குனிகள் லீலாவதி, கிமுரா, பேராசிரியர்கள் நிர்மலா மேரி, தனலட்சுமி, சுந்தர பாண்டியன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செயலாளர் நந்தாராவ் செய்திருந்தார்.