ADDED : ஆக 13, 2025 02:17 AM
மதுரை; மதுரையில் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த 40 பேருக்கு சி.இ.ஓ., அலுவலகத்தில் நேற்று நேர்காணல் நடந்தது.
இவ்விருதுக்காக மாவட்டத்தில் 43 ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு சி.இ.ஓ., ரேணுகா தலைமையில் டி.இ.ஓ.,க்கள் இந்திரா, கணேசன், பி.இ.ஓ., பாண்டி, தலைமையாசிரியர்கள் ரகுபதி, நான்சி குழு நேர்காணல் நடத்தியது. 3 பேர் பங்கேற்கவில்லை.
பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம், மாணவர்கள் நலன்சார்ந்த திட்டச் செயல்பாடுகள், கற்றல் ஆர்வத்தை துாண்டும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கைகள், சமூகப்பணிகள், தலைமையாசிரியராக இருந்தால் பள்ளிக்கு அவர்கள் செய்த அடிப்படை வசதிகள் என்ற அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டன. தேர்வு செய்தஆசிரியர்கள் பட்டியல் இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

