UPDATED : அக் 11, 2026 06:21 PM
ADDED : அக் 11, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் விஜயா பதிப்பகம், துருவம் அறக்கட்டளை சார்பில் இறையன்பு பன்முக பார்வை என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது.
அறக்கட்டளை நிர்வாகி ப்ரீத்தி வரவேற்றார். ஜாஸ் பப்ளிக் பள்ளித் தாளாளர் ஜெயந்த் வேத சாம் தலைமை வகித்தார். இறையன்பு எழுதிய நுால்களை தொகுத்து ‘இறையன்பு பன்முக பார்வை’ என்ற நுாலை எழுதிய எழுத்தாளர் முருகேச பாண்டியன், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ராமகிருஷ்ணன் பேசினர். முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு ஏற்புரையில், ‘‘எழுத்துலகின் தரம் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகளை செப்பனிடும் முறை குறித்து பேசினார். எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், துருவம் அமைப்பினர் கலந்து கொண்டனர். விஜயா பதிப்பகம் வேலாயுதம் நன்றி கூறினார்.
