/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஐ.என்.டி.யு.சி., பிரதிநிதிகள் மாநாடு
/
ஐ.என்.டி.யு.சி., பிரதிநிதிகள் மாநாடு
ADDED : நவ 16, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி., பிரதிநிதிகள் மாநாடு திருப்பரங்குன்றத்தில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் ஜீவன் மூர்த்தி தலைமை வகித்தார்.
அவர் கூறுகையில், 'மாநில நிர்வாகிகள் தேர்தல் நடத்துவதற்காக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து திருவள்ளூர் ஆட்டோ தொழிற்சங்கத்தினர், ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்தல் நடத்தக்கூடாது என வழக்கு தொடர்ந்ததால் பிரதிநிதிகள் மாநாடாக நடத்தப்பட்டது. 1742 பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்கள் ஜெகநாதனை தலைவராக தேர்ந்தெடுத்தனர் என்றார். மாவட்ட தலைவர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

