ADDED : அக் 16, 2024 04:39 AM
மதுரை, : மதுரையில் செயல்படுத்தப்படும் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், இதர மாநில மற்றும் மத்திய அரசுத் திட்டம் குறித்து வேளாண்மை கூடுதல் இயக்குநர் கண்ணையா ஆய்வு செய்தார்.
இத்திட்டத்தில் வழங்கிய தக்கைப்பூண்டு பசுந்தாள் விதைகளை விதைத்துள்ள வயல்களை ஆய்வு செய்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார். ஆய்வின் போது தோடனேரி ஊராட்சி மன்றத்தலைவர் ஜெய்சங்கர், வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர்கள் மேரி ஐரின் ஆக்னிட்டா, தனலட்சுமி, உதவி இயக்குநர் பாலமுருகன், வேளாண் அலுவலர் நாராயணசாமி உடனிருந்தனர்.
சோழவந்தான் வேளாண் விரிவாக்க மையத்தில் இடுபொருட்களின் இருப்பு விபரத்தை ஆய்வு செய்தார். விதை சுத்திகரிப்பு நிலைய ஆய்வின் போது விதைச்சான்று உதவி இயக்குநர் சிங்கார லீனா, உதவி இயக்குநர் பாண்டி, விதைச்சான்று அலுவலர்கள் விஜயகுமார், சுஜித் சவுத்ரி, வேளாண் அலுவலர்கள் சத்தியவாணி, டார்வின் உடனிருந்தனர்.