/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'ஒரே உலகம் ஒரே தியானம்' பங்கேற்க அழைப்பு
/
'ஒரே உலகம் ஒரே தியானம்' பங்கேற்க அழைப்பு
ADDED : டிச 19, 2025 06:18 AM
சோழவந்தான்: உலக தியான தினத்தை முன்னிட்டு உலகம் முழுதும் அனைவரும் டிச.21 ம் தேதி ஒரே நேரத்தில் தியானம் செய்வதற்கு ஸ்ரீராம்சந்த்ர மிஷன், 'ஹார்ட் புல்னஸ் இன்ஸ்டிடியூட்' சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தியானம், யோகா, நன்னெறி அடிப்படையிலான வாழ்க்கை மூலம் மனிதத்தன்மை மாற்றத்திற்காக மேற்கண்ட அமைப்புகள் செயல்படுகின்றன. உலகளாவிய தியான வழி காட்டியான தாஜியால் வழிநடத்தப்பட்டு 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் இலவச தியான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இதன் தலைமையகம் ஹைதராபாத் அருகே கான்ஹா சாந்திவனம். உலகின் மிகப்பெரிய தியான மையங்களில் இதுவும் ஒன்று. பயிற்சி, தியானம், சமூகத் திட்டங்களுக்கான மையமாகவும் செயல்படுகிறது. இந்நிலையில் 'ஒரே உலகம், ஒரே தியானம்' எனும் கருத்தை வலியுறுத்தி நாளை மறுநாள் (டிச.21) தியானம் நடக்க உள்ளது. உலகம் முழுதும் தாஜி தலைமையில் 'யு டியூப்' மூலம் இரவு 8:00 மணிக்கு ஒரே நேரத்தில் அரைமணி நேரம் தியானம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். தியானத்தில் கலந்து கொள்ள ஆன்லைன் லிங்க் https://hfn.link/meditation பயன்படுத்தி இணைந்து கொள்ளலாம்.

