ADDED : அக் 25, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, அக்.25 - காவலர் வீரவணக்க நாளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் போலீஸ் சார்பில் நாளை(அக்.26) மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இரு பாலருக்கான மாரத்தான் போட்டிகள் காலை 6:30 மணிக்கு துவங்குகிறது. விருப்பமுள்ளோர் இன்று (அக்.25) காலை 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை ஆயுதப்படை மைதானத்தில் ஆதார் மற்றும் அடையாள அட்டை நகலுடன் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.
வெற்றி பெறும் இரு பாலருக்கும் தலா ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.5 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். வயது வரம்பு 16 - 50க்குள் இருக்க வேண்டும். ஆண்கள் 5 கி.மீ., பெண்கள் 3 கி.மீ., செல்ல வேண்டும். நல்ல உடல் நலதிறன் அவசியம். விபரங்களுக்கு இன்ஸ்பெக்டர் கணேஷ்ராமை (70100 57960)ல் தொடர்பு கொள்ளலாம்.

