/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம்
/
புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம்
புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம்
புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம்
ADDED : அக் 25, 2025 04:34 AM
மதுரை: மதுரையில் புத்தாக்க நிறுவனங்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடை துறைகளில் புத்தாக்க நிறுவனங்கள் தொழில் துவங்க விரும்பினால் மானியம் அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் டான்ஸிம், ஸ்டார்ட்அப் இந்தியாவில் நிறுவனங்கள் தனியார் நிறுவனமாகவோ, பொறுப்பு கூட்டாண்மை நிறுவனமாகவோ பதிவு செய்திருக்க வேண்டும்.
கடைசி மூன்றாண்டு சராசரி லாபம் ரூ. 5 லட்சத்தை விட குறைவாக இருக்க வேண்டும். அரசு அல்லது அரசுசார் பிற நிறுவனங்களிடம் இருந்து எந்த கடனும் வைத்திருத்தல் கூடாது.
புதிய யூனிட்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம், ஏற்கனவே தொடங்கப்பட்ட தொழிலை விரிவுபடுத்தி சந்தைப்படுத்த தேர்வு செய்யப்படும் புத்தாக்க நிறுவனத்திற்கு ரூ.25 லட்சம் வரை மானியம் உண்டு.
மதுரை அண்ணாநகரில் உள்ள வேளாண்மை வணிக துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
அலைபேசி: 94424 91947.

