ADDED : அக் 25, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன்கோட்டை மீனாட்சியம்மன் கோயில் அருகே அயோத்திதாஸ் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ.ஒரு கோடி மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி, துணைத்தலைவர் கார்த்திக், உதவி பொறியாளர் நாகராஜ் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் நல்லம்மாள் வரவேற்றார்.
இளநிலை உதவியாளர்கள் முத்துப்பாண்டி, கார்த்திக், தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் பிரகாஷ், கோயில் திருப்பணி குழுவினர் சரண், இளங்கோவன், சேசு கிருஷ்ணன், பட்டர்கள் சுப்பிரமணி, கிருஷ்ணகுமார் பங்கேற்றனர்.
முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

