/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சி முறைகேடு புகாரை விசாரிக்க ஐ.பி.எஸ்., நியமிச்சாச்சு... ; நீதிமன்றம் உத்தரவால் சூடுபிடிக்குது விசாரணை

ADDED : ஜூலை 23, 2025 01:26 AM

மதுரை,: மதுரை மாநகராட்சியில் விதிமீறி சொத்து வரி நிர்ணயம் செய்து ரூ.பல கோடி முறைகேடு செய்த புகாரை விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி மதுரை டி.ஐ.ஜி., அபிநவ் குமார் ஐ.பி.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கட்டடங்கள், வீடுகளுக்கு 2023, 20204 ல் விதிமீறி சொத்துவரி நிர்ணயம் செய்தது தொடர்பான புகாரில் மாநகராட்சி அதிகாரிகள் பாஸ்வேர்டை முறைகேடாக பயன்படுத்தி வரியை குறைத்தது தெரியவந்தது. மத்திய குற்றப் பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் வினோதினி தலைமையில் விசாரணை நடக்கிறது. இதுவரை மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்த பணியாளர்கள், கணினி ஆபரேட்டர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 தி.மு.க., மாநகராட்சி மண்டல தலைவர்கள், 2 நிலைக் குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். பில் கலெக்டர்கள் உட்பட 16 பேரை மாநகராட்சி 'சஸ்பெண்ட்' செய்தது. மேலும் 55 பேருக்கு இம்முறைகேட்டில் தொடர்பு உள்ளதாக போலீசார் பட்டியல் தயாரித்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் மாநில அரசு விசாரித்தால் உண்மை நிலவரம் வெளிவராது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அ.தி.மு.க., கவுன்சிலர் ரவி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம், 'சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை. ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
மாநகராட்சி முறைகேடு புகாரை விசாரிக்க மதுரை டி.ஐ.ஜி., அபிநவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மாநகராட்சி முறைகேடு விசாரணை மேலும் சூடுபிடிக்க உள்ளது.