/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குப்பைக் கிடங்காக மாறும் பாசன கால்வாய்
/
குப்பைக் கிடங்காக மாறும் பாசன கால்வாய்
ADDED : ஜூலை 16, 2025 01:46 AM

சோழவந்தான் : சோழவந்தான் விக்கிரமங்கலம் அருகேகோவில்பட்டியில் பாசன கால்வாயில் குப்பை கொட்டுவதால் விவசாயம் பாதிக்கும் என அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர்.
அப்பகுதி ராஜேந்திரன் கூறியதாவது: திருமங்கலம் பிரதான கால்வாய் குடிநீர், விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளது. இதனால் ஏராளமான ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. கால்வாயின் இருகரைகளிலும் கால்வாயிலும் குப்பை கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
தற்போது கால்வாயில் நீர் வரத்து இல்லாததால் குப்பை தேங்கி கிடக்கிறது. தண்ணீர் வரும்போது குப்பை அடித்துச் செல்லப்பட்டு விவசாய நிலங்களில் பரவும். மதகுகளை குப்பை அடைத்து தண்ணீர் சரியாக செல்ல முடியாத நிலை ஏற்படும். சாகுபடி நிலங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சேருவதால் விளைச்சல் பாதிக்கும். அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை. ஊராட்சி அதிகாரிகள் உடனே குப்பையை அகற்ற வேண்டும் என்றார்.