/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'எமிஸ்' பணிகள் ஆசிரியருக்கு மீண்டும் அதிகரிப்பு: அமைச்சர் உத்தரவு அவ்வளவுதானா
/
'எமிஸ்' பணிகள் ஆசிரியருக்கு மீண்டும் அதிகரிப்பு: அமைச்சர் உத்தரவு அவ்வளவுதானா
'எமிஸ்' பணிகள் ஆசிரியருக்கு மீண்டும் அதிகரிப்பு: அமைச்சர் உத்தரவு அவ்வளவுதானா
'எமிஸ்' பணிகள் ஆசிரியருக்கு மீண்டும் அதிகரிப்பு: அமைச்சர் உத்தரவு அவ்வளவுதானா
ADDED : ஆக 13, 2025 06:36 AM
மதுரை:கல்வித்துறையில் கற்பித்தல் நேரம் பாதிக்கும் வகையில் நடைமுறையில் இருந்த 'எமிஸ்' பதிவேற்றப் பணிகள் ஆசிரியர்களுக்கு மீண்டும் அதிகரித்துள்ளதால் எரிச்சலடைந்துள்ளனர். 'எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவர்' என்ற அமைச்சர் மகேஷ் உத்தரவு அவ்வளவு தானா என கேள்வி எழுந்துள்ளது.
இத்துறையில் பள்ளிகள், ஆசிரியர், மாணவர்கள் என அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்யும் வகையில் 'எமிஸ்' போர்ட்டல் நடைமுறையில் உள்ளது. இதில் தினமும் மாணவர்கள் வருகை முதல் நலத் திட்டங்கள் வரை ஒவ்வொரு ஆசிரியரும் 150க்கும் மேற்பட்ட விபரங்கள் பதிவேற்றம் செய்தனர். நெட் ஒர்க் பிரச்னையால் இதில் மேற்கொள்ளப்படும் பதிவேற்றப் பணிகளால் ஆசிரியர்களுக்கு போராட்டமாக அமைந்தது. இதனால் கற்பித்தல் பணி கடுமையாக பாதித்தது.
இதுதொடர்பாக ஆசிரியர்களிடையே அதிகரித்த அதிருப்தி காரணமாக, ஓராண்டுக்கு முன் ''எமிஸ்' பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவர்' என அமைச்சர் மகேஷ் அறிவித்தார். அதன்படி அப்பணிகளில் சில குறைக்கப்பட்டன. இருப்பினும் மாணவர்கள் வருகை உள்ளிட்டவை பதிவேற்றம் மேற்கொள்ளும் வகையில் ஆசிரியர்களின் அன்றாடப் பணிகள் எமிஸில் தொடர்ந்தன.
தற்போது மாணவர்கள் உடல் சார்ந்த, நோய் அறிகுறி குறித்த தகவல்கள் உட்பட பல்வேறு பதிவுகளை மேற்கொள்ள அதிகாரிகள் தொடர்ந்து உத்தரவு பிறப்பித்து வருகின்றனர். இதனால் மீண்டும் எமிஸ் பணிகள் அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: வருகை பதிவு உள்ளிட்ட வழக்கமான பதிவேற்றங்களுக்கு இடையே தற்போது மாணவர்கள் கண் பரிசோதனை, உடல் சார்ந்த பரிசோதனை மேற்கொண்டு அதற்கான அளவீடுகளை 'டி.என்.எஸ்.இ.டி., ஸ்கூல்ஸ்' செயலியில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவருக்கு கண், காது, உடல் சார்ந்த நோய் பிரச்னை தொடர்பாக 21 காலங்கள் கொடுக்கப்பட்டு அனைத்தையும் நிரப்ப வேண்டும். இதுதவிர தற்போது 'திறன்' திட்டத்தில் மெல்ல கற்கும் 'போக்கஸ்' மாணவர்கள் விபரங்கள், கலைத் திருவிழா தொடர்பாக நிகழ்ச்சிகள், வெற்றி பெற்ற மாணவர்கள், பரிசு விபரங்கள், சத்துணவு குறித்து சாப்பிடும் மாணவர், வேண்டாம் என கூறுவோர் விபரம், இலவச பஸ் பாஸ் தேவை, தேவைப்படாத மாணவர் விபரம், ஆதார் புதுப்பிப்பு, நலத்திட்டங்கள் பெற்ற மாணவர்களின் விபரம் என பழைய நிலையில், அனைத்து தகவல்களையும் ஆசிரியர்களே பதிவேற்றம் செய்யும் நிலை தற்போதும் ஏற்பட்டுள்ளது.
இப்பதிவேற்றங்களுக்காக தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. அமைச்சரின் உத்தரவை அதிகாரிகள் ஒருசில மாதங்களில் காற்றில் பறக்கவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.