/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எங்கள் பிரச்னைக்கு விடிவே கிடையாதா: தவிக்கும் தாய் மூகாம்பிகை நகர் மக்கள்
/
எங்கள் பிரச்னைக்கு விடிவே கிடையாதா: தவிக்கும் தாய் மூகாம்பிகை நகர் மக்கள்
எங்கள் பிரச்னைக்கு விடிவே கிடையாதா: தவிக்கும் தாய் மூகாம்பிகை நகர் மக்கள்
எங்கள் பிரச்னைக்கு விடிவே கிடையாதா: தவிக்கும் தாய் மூகாம்பிகை நகர் மக்கள்
ADDED : அக் 04, 2024 06:45 AM

கருப்பாயூரணி -: கருப்பாயூரணி அருகே அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் மக்களை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் தாய்மூகாம்பிகை நகர் மக்கள் தவிப்பில் உள்ளனர்.
மதுரை கருப்பாயூரணி மேலமடையை அடுத்து உள்ளது பழைய பாண்டி கோவில் பாதை. இப்பகுதியில் உள்ளது தாய் முகாம்பிகை நகர். நாற்பது குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த தெருவில் பல ஆண்டுகளாக ரோடு வசதி, குடிநீர், மின்விளக்கு, போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அப்பகுதியினர் தவித்து வந்தனர்.
இந்தத் தெரு வழியாக பக்தர்கள் ஏராளமானோர் பாண்டி கோவிலுக்கு செல்வர். இந்த ரோடு பல ஆண்டுகளாக குண்டும், குழியுடன் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. பல போராட்டங்களுக்கு பிறகு ரோடு அமைக்க ஜல்லிக் கற்களை கொட்டி வைத்துள்ளனர். பல மாதங்களாகியும் பணி நடக்காததால், ரோடு அமையுமா என மக்கள் குழப்பத்தில் உள்ளனர். பாதாள சாக்கடை கால்வாய் வசதி இல்லாததுடன், மின்விளக்கு வசதியும் இல்லாமல் அச்சமுடன் வசிக்கின்றனர்.
அய்யம்பெருமாள் என்பவர் கூறியதாவது: ரோட்டில் ஜல்லிக்கற்களை கொட்டியுள்ளதால் பள்ளி செல்லும் சிறுவர்கள் தடுக்கி விழுந்து காயமடைகின்றனர். வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். பாண்டி கோயில் செல்லும் முதியோர், பெண்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். ரோடு வசதி இல்லாததால் போக்குவரத்து வசதியும் இல்லை. இக்குறைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
முன்னாள் கவுன்சிலர் கருப்பையா (தி.மு.க.,) கூறியதாவது: பல மாதங்களாக அடிப்படை வசதிக்காக இத்தெரு மக்களுடன் போராடி வருகிறோம். சரியான ரோடு இல்லாமல் 4 மாதங்களுக்கு முன் ஜல்லிக் கற்களை கொட்டி வைத்தனர். அதன்பின் யாரும் கண்டு கொள்ளவே இல்லை. புதிய மின்விளக்கு பொருத்தி 2 மாதங்களிலேயே பழுதாகிவிட்டது. மூன்று மாதங்களாக எரியாததால் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. கால்வாய் வசதி இல்லாமல் கழிவுநீர் ரோட்டில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று அபாயம் உள்ளது. இவற்றை எப்போதுதான் சரி செய்வரோ தெரியவில்லை என்றார்.