ADDED : ஆக 05, 2026 03:38 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் சத்குருவின் ஈஷா அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மக்களுக்கான 'ஈஷா கிராமோத்ஸவம்' விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். ஸ்ரீ அரபிந்தோ மிரா கல்விக் குழும இயக்குநர் அபிலாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கோச்சடை பகுதியின் 20 கிராமங்களின் கைப்பந்து வீரர்கள் பங்கேற்றனர். இறுதிப் போட்டிகள் செப்.6ல் கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குரு முன்னிலையில் நடைபெறும். இதில் வெல்லும் கைப்பந்து, எறிபந்து அணிகளுக்கு தலா ரூ.5 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.3 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.ஒரு லட்சம், நான்காம் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
