/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாவட்ட 'ரேங்க்'கிலும் பின்தங்கியது.
/
மாவட்ட 'ரேங்க்'கிலும் பின்தங்கியது.
ADDED : மே 08, 2024 05:12 AM
பிளஸ் 2 தேர்வில் மதுரை 95.19 சதவீதம் தேர்ச்சி பெற்று கடந்தாண்டை விட 0.65 சதவீதம் தேர்ச்சி சரிவடைந்தது. மாவட்ட 'ரேங்க்'கிலும் பின்தங்கியது.
குறிப்பாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரையாண்டு, இரண்டாம் திருப்புதல் தேர்வுகளில் 80 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி காட்டிய பெரும்பாலான அரசு பள்ளிகளின் பொதுத் தேர்வு தேர்ச்சி கடுமையாக சரிந்துள்ளது. மாவட்ட 'ரேங்க்' பின்னடைவுக்கு 'சென்டம்' தேர்ச்சி பள்ளிகள் எண்ணிக்கை கடுமையாக குறைந்ததே காரணம்.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பொதுத் தேர்வுக்கு முன் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், பள்ளிகளின் 'சென்டம்' தேர்ச்சிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் தொடர்ந்து சரிவர பின்பற்றப்படவில்லை.
அரையாண்டு, திருப்புதல் தேர்வு தேர்ச்சி சதவீதங்கள் பெரும்பாலான பள்ளிகளில் அதிகமாக காண்பிக்கப்பட்டு டி.இ.ஓ., சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அதிகாரிகளும் அப்படியே நம்பிவிட்டனர். குறிப்பாக அலங்காநல்லுார் (ஆண்கள்), வல்லாளப்பட்டி, எம்.சத்திரப்பட்டி, ஒத்தக்கடை (ஆண்கள்), பேரையூர் (ஆண்கள்) அரசு பள்ளிகள் பொதுத் தேர்வில் மிக குறைவான தேர்ச்சியை பெற்றுள்ளன. ஆனால் அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் தேர்ச்சி விகிதங்கள் அதிகரித்து காண்பிக்கப்பட்டுள்ளன. இந்த 'தாராள தேர்ச்சி லிஸ்ட்'டுகள் தற்போது தான் அதிகாரிகள் கவனத்திற்கு தெரிந்து அதிர வைத்துள்ளது.
முந்தைய தேர்ச்சி ஆய்வுகள் 'குத்துமதிப்பாக' நடந்ததால் இதுபோன்ற விஷயங்களை முன்கூட்டியே கணிக்க முடியாமல் போனது என கல்வித்துறை மீது விமர்சனம் எழுந்துள்ளது.

